வாயின் அருகேயான தொடுதலுக்கு
முன்பு பின்வாங்கிய சிசு,
இப்போது அதற்கு நேற்மாறாக
தூண்டுதலை நோக்கித் திரும்பி,
வாயைத் திறக்கிறது.
"ரூட்டிங் ரிஃப்ளெக்ஸ்" எனப்படும்
இச்செய்கை
பிறப்பிற்குப் பின்னும் தொடர்ந்து,
பிறந்த குழந்தை பாலுண்ணும் போது
தாயின் மார்புக்காம்பை
கண்டுகொள்ள உதவுகிறது.