Skip Navigation
The Endowment for Human Development
The Endowment for Human Development
Improving lifelong health one pregnancy at a time.
Donate Now Get Free Videos

Multilingual Illustrated DVD [Tutorial]

The Biology of Prenatal Development




பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி

.தமி [Tamil]


National Geographic Society This program is distributed in the U.S. and Canada by National Geographic and EHD. [learn more]

Choose Language:
Download English PDF  Download Spanish PDF  Download French PDF  What is PDF?
 

The Fetal Period (8 Weeks through Birth)

Chapter 37   9 Weeks: Swallows, Sighs, and Stretches

சிசுவின் காலகட்டம் பிறப்பு வரை தொடர்கிறது.

9 வாரங்களில் கை கட்டை விரல் சூப்புதல் தொடங்குகிறது சிசு ஆம்னியாட்டிக் திரவத்தை குடிக்கிறது.

சிசு ஒரு பொருளைப் பற்றுதல், தலையை முன்னும் பின்னும் அசைத்தல், தாடையை திறந்து மூடுதல், நாக்கை ந்ட்டுதல், பெருமூச்சு விடுதல் ஆகியவற்றை செய்கிறது.

முகத்தில், உள்ளங்கையில் மற்றும் உள்ளங்காலில் உள்ள நரம்புகளால் மிருதுவான தொடுதலை உணர முடியும்.

"உள்ளங்கால்களை மிருதுவாகத் தொட்டால்" சிசுவானது இடையையும் முட்டியையும் மடக்கி கால் விரல்களையும் மடித்துக் கொள்கிறது.

இந்தக் காலகட்டத்தில் கண் இமைகள் முழுவதுமாக மூடிய நிலையில் உள்ளன.

குரல் வளையில் குரல் பந்தகங்கள் தோன்றுவது, குரல் தசை நார்கள் வளர்வதைக் குறிக்கின்றன.

பெண் சிசுக்களில், கர்பப்பையை அடையாளம் காண் முடியும். முழு வளர்ச்சியடையாத இனப்பெருக்க செல்களான ஊகோனியா கருப்பைக்குள் வளரத் தொடங்குகின்றன.

ஆண், பெண் என்பதைக் குறிக்கும் புறப்பாலுறுப்புகள் தோன்றுகின்றன.

Chapter 38   10 Weeks: Rolls Eyes and Yawns, Fingernails & Fingerprints

9 முதல் 10 வாரங்களுக்குள் நிகழும் திடீர் வளர்ச்சி உடல் எடையை 75%-க்கும் மேல் அதிகரிக்கச் செய்கிறது.

10 வாரங்களில், மேற்புற கண்ணிமையின் தூண்டுதலால் கண் கீழ்நோக்கி சுழல்கிறது.

சிசு கொட்டாவி விடுவதுடன், அடிக்கடி வாயைத் திறந்து மூடுகிறது.

அநேக சிசுக்கள் வலதுகைக் கட்டைவிரலை சப்புகின்றன.

தொப்புள் கொடியினுள் இருக்கும் குடலின் சில பகுதிகள் வயிற்றுப் பகுதிக்குள் வரத் தொடங்குகின்றன.

அநேக எலும்புகளில் ஆஸிஃபிக்கேஷன் நடைபெறுகிறது.

கை மற்றும் கால் நகங்கள் வளரத் தொடங்குகின்றன.

கருவுற்ற 10 வாரங்களில் தனிப்பட்ட கைரேகைகள் தோன்றுகின்றன. இவை வாழ்நாள் முழுவதும் தனிப்பட்ட அடையாளக் குறியாகப் பயன்படுத்தப்படுகிறது.

Chapter 39   11 Weeks: Absorbs Glucose and Water

11 வாரங்களில் மூக்கும் உதடுகளும் முழுவதுமாக உருவாகின்றன. உடலின் மற்ற பாகங்களைப் போன்றே, அவற்றின் தோற்றம் மனித் வாழ்க்கை சுழற்சியின் ஒவ்வொரு நிலையிலும் மாறுகிறது.

குடலானது சிசு விழுங்கிய க்ளூக்கோஸ் மற்றும் தண்ணீரை கிரகிக்கத் தொடங்குகிறது.

பாலினமானது கருவுறும் போதே அறியப்பட்டாலும், இக்கட்டத்தில், வெளிப்புற பாலுறுப்புகள் ஆண் அல்லது பெண் என்ற வேற்றுமையை உணர்த்துகின்றன.

Chapter 40   3 to 4 Months (12 to 16 Weeks): Taste Buds, Jaw Motion, Rooting Reflex, Quickening

11 முதல் 12 வாரங்களுக்குள், சிசுவின் எடை ஏறத்தாழ 60% அதிகரிக்கிறது.

12 வாரங்கள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள், அல்லது ட்ரைமெஸ்டர் முடிவடைந்ததைக் குறிக்கிறது.

இக்கட்டத்தில் வாயினுள் தனிப்பட்ட சுவையை உணரும் அமைப்புகள் உருவாகின்றன.
பிறப்பின் போது, இவை நாக்கிலும் வாயின் மேற்புறத்திலும் மட்டுமே காணப்படும்.

குடல் அசைவுகள் 12 வாரங்களில் தொடங்கி இன்னுமொரு 6 வாரங்கள் தொடர்கின்றன.

சிசு மற்றும் பிறந்த குழந்தையின் மலக்குடலிலிருந்து வெளிவருவது மிகோனியம் எனப்படும். இது செரிமான என்ஸைம்கள், புரோட்டீன்கள், மற்றும் உணவுப்பாதையினால் உதிர்க்கப்பட்ட இறந்த செல்கள் ஆகியவற்றால் ஆனது.

12 வாரங்களில், கையின் நீளம் உடலின் அளவுக்கு ஏற்ற விகிதத்தில் அமைகிறது. கால்கள் சரிவிகிதத்தில் அமைய வெகு நாட்கள் ஆகின்றன.

இக்கட்டத்தில் முதுகு மற்றும் உச்சந்தலையைத் தவிற, சிசுவின் மற்ற உடற்பாகங்கள் தொடுதலுக்குத் தக்கவாறு இயங்குகின்றன.

பாலின வளர்ச்சியில் முதன்முறையாக வேறுபாடு தோன்றுகிறது. உதாரணமாக, பெண் சிசுக்களின் தாடை இயக்கங்கள் ஆண் சிசுக்களை விட அதிக அளவில் இயங்குகின்றன.

வாயின் அருகேயான தொடுதலுக்கு முன்பு பின்வாங்கிய சிசு, இப்போது அதற்கு நேற்மாறாக தூண்டுதலை நோக்கித் திரும்பி, வாயைத் திறக்கிறது. "ரூட்டிங் ரிஃப்ளெக்ஸ்" எனப்படும் இச்செய்கை பிறப்பிற்குப் பின்னும் தொடர்ந்து, பிறந்த குழந்தை பாலுண்ணும் போது தாயின் மார்புக்காம்பை கண்டுகொள்ள உதவுகிறது.

முகம் முதிர்ச்சியடைந்து கன்னங்களில் கொழுப்புச்சத்து நிறைந்து பல் வளர்ச்சி தொடங்குகிறது.

15 வாரங்களில், இரத்த அணுக்களை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் தோன்றி எலும்பு மஜ்ஜையில் பெருகத் தொடங்குகின்றன. பெருவாரியான இரத்த அணுக்கள் இங்கு உருவாகின்றன.

6-வார கருவில் சிறிதளவு அசைவு தோன்றினாலும், கர்ப்பமுற்ற ஒரு பெண் சிசுவின் அசைவை முதன்முதலில் உணர்வது 14 முதல் 18 வாரங்களுக்குள் தான். இச்செய்கை க்விக்கெனிங் எனப்படுகிறது.

Chapter 41   4 to 5 Months (16 to 20 Weeks): Stress Response, Vernix Caseosa, Circadian Rhythms

16 வாரங்களில், சிசுவின் வயிற்றுப் பகுதிக்குள் செலுத்தப்படும் ஒரு ஊசி ஒரு ஹார்மோனல் அழுத்தத்தைத் தூண்டுகிறது. இதன் விளைவாக நாரட்ரினாலின், அல்லது நாரெப்பினெஃப்ரைன் ஆகியவை வெளியிடப்பட்டு இரத்தத்தில் கலக்கின்றன. இத்தகைய செய்கைகளுக்கு இதே மாதிரியான எதிர்வினைச் செயலை பிறந்த குழந்தை மற்றும் மனிதர்களில் காணலாம்.

சுவாச அமைப்பில், பிராங்கயல் அமைப்பு அநேகமாக முற்றுப்பெற்றிருக்கிறது.

வெர்னிக்ஸ் கேஸோஸா என்ற பாதுகாப்பான ஒரு வெள்ளைத் திரவம், சிசுவின் மீது படர்ந்திருக்கிறது. இது சிசுவின் தோலை ஆம்னியாட்டிக் திரவத்தின் எரிச்சலூட்டும் விளைவுகளில் இருந்து காக்கிறது.

19 வாரங்கள் முதல் சிசுவின் அசைவு, சுவாசம், மற்றும் இதயத் துடிப்பு தினசரி சுழற்சியைத் தொடங்குகிறது. இது சிர்காடியன் ரிதம் எனப்படுகிறது.

Chapter 42   5 to 6 Months (20 to 24 Weeks): Responds to Sound; Hair and Skin; Age of Viability

20 வாரங்களில் காக்லியா எனப்படும் கேள்வி உறுப்பு, முழு வளர்ச்சி அளவை அடைகிறது. இது முற்றிலும் வளர்ச்சியடைந்த உட்காதுக்குள் அமைந்திருக்கிறது. இந்தக் கட்டத்திலிருந்து, சிசு பல்வேறு சத்தங்களுக்கு பதில் வினை புரிகிறது.

தலையின் மேல்பாகத்தில் முடி வளரத் தொடங்குகிறது.

அனைத்து தோல் அடுக்குகளும் அமைப்புகளும் உள்ளன. இதில் முடி உறைகளும், சுரப்பிகளும் அடக்கம்.

கருவுற்ற 21 முதல் 22 வாரங்களுக்குள், நுரையீரல் காற்றை சுவாசிக்கும் திறமையை பெறுகிறது. இது சாத்தியமான சூழ்நிலை என்று கருதப்படுகிறது ஏனெனில் கருவுக்கு வெளியேயும் உயிர் வாழ்வது சில சிசுக்களுக்கு ஏதுவாகிறது. மருத்துவத் துறையின் முன்னேற்றங்கள் தமது காலத்திற்கு முன்பே பிறந்த சிசுக்கள் வாழ வழி செய்கின்றன.

Chapter 43   6 to 7 Months (24 to 28 Weeks): Blink-Startle; Pupils Respond to Light; Smell and Taste

24 வாரங்களில் கண் இமைகள் திறப்பதால் சிசுவானது கண் சிமிட்டும் எதிர்வினை புரிகிறது. திடீர் மற்றும் சத்தமான குரல்களுக்கான பதில் வினைகள் பெண் சிசுக்களில் சீக்கிரமே தொடங்குகின்றன.

அநேக ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை அதிக சத்தம் சிசுவின் உடல்நிலையை பாதிக்கக்கூடும் என்கிறது. இதன் உடனடி விளைவுகள் இதயத் துடிப்பு அதிகமாதல், சிசு அதிக அளவில் திரவத்தை விழுங்குதல் மற்றும், செய்கைகளில் திடீர் மாற்றம் ஆகியவை. காது கேளாமையும் விளைவிக்கப்படக் கூடும்.

சிசுவின் சுவாசவிகிதம் அதிகரிக்கக்கூடும். இது நிமிடத்திற்கு 44 சுழல்கள் என்று அமையலாம்.

கர்ப்பத்தின் இறுதி மூன்று மாதங்களில், அதிவேகமாக ஏற்படும் மூளை வளர்ச்சி சிசுவின் ஆற்றலில் 50%-க்கும் மேலான ஆற்றலை பயன்படுத்துகிறது. மூளையின் எடை 400 முதல் 500% வரை அதிகரிக்கிறது.

26 வாரங்களில் கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்கின்றன.

கண்மணியானது 27 வாரங்களிலேயே ஒளிக்கு பதில் வினை புரிகிறது. இந்த பதில் வினை, வாழ்நாள் முழுவதும் விழித்திரைக்குள் விழும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

நுகர்ச்சிக்குத் தேவையான அனைத்து பாகங்களும் செயல்படுகின்றன. தமது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளை பற்றிய ஆய்வுகள் அவற்றின் நுகர்வுத் திறன் கருவுற்ற 26 வாரங்களிலேயே இருப்பதை நிலைப்படுத்துகின்றன.

ஆம்னியாட்டிக் திரவத்தில் கலக்கப்படும் இனிப்பான பொருள் சிசுவின் விழுங்கும் விகிதத்தை அதிகரிக்கிறது. இதற்கு மாறாக, கசப்பான பொருளை கலக்குதல் விழுங்கும் விகிதத்தைக் குறைக்கிறது. முக பாவங்கள் மாறுகின்றன.

அடி மேல் அடி எடுத்து வைத்து நடப்பது போன்ற அசைவுகளைப் போல சிசு குட்டிகரணம் அடிக்கிறது.

சிசுவின் தோல் சுருக்கங்கள் குறைகின்றன. இதற்குக் காரணம் தோலின் கீழ் படியும் கொழுப்புச்சத்தாகும். கொழுப்புச்சத்து உடல் வெப்பத்தைப் பராமரிக்க உதவுகிறது. பிறப்பிற்குப் பிறகு தேவையான ஆற்றலையும் பாதுகாக்கிறது.

Chapter 44   7 to 8 Months (28 to 32 Weeks): Sound Discrimination, Behavioral States

28 வாரங்களில் சிசு ஒலியின் ஏற்றத்தாழ்வுகளை இனம் பிரித்தறிகிறது.

30 வாரங்களில் ஒரு சராசரி சிசுவின் சுவாசம் 30 முதல் 40% நேரம் நடைபெறுகிறது.

கர்ப்பத்தின் இறுதி மாதங்களில், சிசு ஒருங்கிணைந்த இயக்கத்தையும் ஓய்வையும் வெளிப்படுத்துகிறது. இச்செயல்கள் சிசுவின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

Chapter 45   8 to 9 Months (32 to 36 Weeks): Alveoli Formation, Firm Grasp, Taste Preferences

ஏறத்தாழ 32 வாரங்களில், ஆல்வியோலை, அல்லது காற்று செல்கள், நிரையீரலில் உருவாகத் தொடங்குகின்றன. இதன் வளர்ச்சி குழந்தை பிறந்த பின்னும் 8 வருடங்கள் வரை தொடரும்.

35 வாரங்களில் சிசுவின் கைகள் உறுதியான பிடிமானத்தை அடைகின்றன.

சிசு பல்வேறு பொருட்களுக்கு வெளிப்படுத்தப்படுவது பிறந்த பின் அதன் சுவைத்திறனை உருவாக்க் உதவுகிறது. உதரணமாக, லிக்கொரைஸுக்கு சுவையளிக்கும் சோம்பை உண்ட தாய்மார்களின் சிசுக்கள் பிறந்த பிறகு சோம்ப் உண்ண மிகுந்த விருப்பம் காட்டின. அச்சுவையை அறியாத சிசுக்கள், பிறப்பிற்குப் பிறகு அதை வெறுத்தன்.

Chapter 46   9 Months to Birth (36 Weeks through Birth)

சிசு பிரசவத்தைத் தொடங்குகிறது. இது ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனை அதிக அளவில் வெளியிடுகிறது. இந்தக் கட்டத்தில் சிசு பிறந்த குழந்தை என்ற நிலைக்கு மாறுகிறது.

பிரசவத்தின் போது கர்ப்பப்பை சுருங்குவது குழந்தை பிறக்க ஏதுவாகிறது.

கருத்ததிப்பில் தொடங்கி பிறப்பு மற்றும் அதன் பின்னரும், மனித வளர்ச்சி மாறுதலுக்கு உட்பட்ட, தொடர்ந்த மற்றும் சிக்கலான ஒரு செய்கையாகிறது. அதிசயிக்கத்தக்க இந்த செய்கையின் புதிய கண்டுபிடிப்புகள் சிசுவின் வளர்ச்சி வாழ்நாள் முழுவதுமான உடல்நலத்தில் பெரும் பங்கு வகிப்பதை காட்டுகிறது.

ஆரம்பகால மனித வளர்ச்சியைப் பற்றிய நமது அறிவு பெருகப் பெருக, ஆரோக்கியத்தைப் பேணும் நமது அறிவும் பெருகும் - பிறப்பிற்கு முன்னும் பின்னும்.