ஏறத்தாழ 2 ½ வாரங்களில்,
எப்பிபிளாஸ்ட்
3 பிரத்யேக சவ்வுகளை
அல்லது கிருமி அடுக்குகளை உருவாக்குகிறது.
இவை எக்ட்டோடர்ம்,
எண்டோடர்ம்,
மற்றும் மீஸோடர்ம் எனப்படும்.
எக்ட்டோடர்ம்
பல்வேறு அமைப்புகளை உருவாக்குகிறது.
இதில் மூளை,
முதுகுத் தண்டு,
நரம்புகள்,
தோல்,
நகங்கள்,
மற்றும் முடி ஆகியவை அடங்கும்.
எண்டோடர்ம் ஸ்வாச அமைப்பின்
உட்படையையும்
செரிமானப் பாதையையும்,
மற்றும் முக்கிய உறுப்புகளின் சில
பகுதிகளையும் உருவாக்குகிறது.
இவ்வுருப்புகள் கல்லீரல்,
மற்றும் கணையம் ஆகும்.
மீஸோடர்ம் இதயம்,
சிறுநீரகம்,
எலும்புகள்,
குருத்தெலும்பு,
தசைகள்,
இரத்த அணுக்கள்,
மற்றும் பிற அமைப்புகளை
உருவாக்குகின்றன.