4 முதல் 5 வாரங்களுக்குள்,
மூளை வேகமாக வளர்ந்து
5 தனிப்பட்ட பகுதிகளாக பிரிகின்றன.
தலையின் அளவு கருவின் மொத்த அளவில்
மூன்றில் ஒரு பகுதியாகும்.
மூளையின் அரைக்கோளம் தோன்றி,
மெல்ல மெல்ல மூளையின் பெரும்பகுதியாக
மாறுகிறது.
மூளையின் அரைக்கோளத்தால்
கட்டுப்படுத்தப்படும் செயல்களுள்
சிந்தனை, கல்வி,
நினைவாற்றல், பேச்சு, பார்வை,
கேட்டல், தானாக அசைதல்,
மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல்
ஆகியவை அடங்கும்.